• Fri. Mar 29th, 2024

வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்திய எஸ்பிஐ வங்கி

ByA.Tamilselvan

Sep 15, 2022

எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 0.7%உயர்த்தி உள்ளது. இந்த வட்டிவிகிதம் இன்று முதல் அமுக்கு வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7 சதவீதம் உயர்வின் காரணமாக 13.45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அடிப்படை வட்டி விகிதத்தையும் 8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக பாரத் ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு EMI தொகை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.வட்டி விகித உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *