• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சஞ்சய் ராவத் காவல் செப். 5 வரை நீட்டிப்பு

ByA.Tamilselvan

Aug 22, 2022

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்தை எம்.பி.யைவிசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சஞ்சய் ராவ்த்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்டம்பர் 5 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.