


ஆந்திராவின் வளர்ச்சித்திட்டங்கள் அதற்கான நிதிஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது போலவரம் நீர்ப்பாசன திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். இதுதவிர விஜயநகரம் மாவட்டம் போகபுரம் விமான நிலையம், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மற்றம் பல்வேறு மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பது குறித்தும் பிரதமருடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

