கோவை வேலாந்தாவளம் பகுதியில் ,சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமாவளவன் டெல்லியில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரை மக்கள் தேவைகளுக்காக சந்திப்பது நமது கடமை என்றும் இன்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம் பழங்குடியின மக்களின் நலன்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசின் துணை, உதவி மற்றும் நிதி தேவைப்படுகிறது என்று கோரினார். இந்திய அரசு விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் அரசு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தினால் அவ்வளவுதான் வளர்ச்சிப் பணிகள் அப்படியே நின்றுவிடும் என்று கூறினார்.

நாம் உணவை வீணாக்குகிறோம் என்று கூறிய ஆடம்பர நிகழ்ச்சிகளிக் ஒரு மனிதன் சாப்பிடுவதைவிட 5 மடங்கு உணவை இலையில் வைத்து, அவனால் சாப்பிட முடியாத நிலையில் தூக்கிப்போடும் நிலை உள்ளது, அந்த உணவு 5 ஏழைகள் சாப்பிடும் அளவிற்கான உணவாக உள்ளது என்ற அவர் இதுபோன்ற ஆடம்பர விழாக்களில் பங்கேற்று, சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்கிறோம் என்றார். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மக்களுக்கு மத்திய அரசின் உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் 1% மட்டுமே இருக்கிறார்கள் என்பதால் பழங்குடியின மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளனர் என்றும் அவர்களுக்கான சாதி சான்றிதழ் பெறுவதில் கூட சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இதனை ஒன்றிய அமைச்சர் ஜுயல் ஒரம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கட்சி எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், மனித நேயம் என்பதே மனிதர்களுக்கு உயர்ந்தது. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
முன்னதாக பேசிய அமைச்சர் வன்னியரசு
இங்கு ஒன்றிய பழங்குடியினர் அமைச்சர் வந்திருக்கிறார், நம் மாநிலத்திற்கான நிதியைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

நம்முடைய சட்டமன்றத்தில் பழங்குடியின மக்களுக்கும், ஆதிதிராவிடர் மக்களுக்கும் நிறைய திட்டங்களை அறிவித்துள்ளோம் என்றும் பழங்குடியின மக்களின் மரபு நடையை பாதுகாப்பதும், மொழியை மீட்டு எழுத்துருவாக்கம் செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளோம் என்றும் கூறினார். செங்காந்தள் மலரை சாகுபடி செய்து, அதனை நேச்சுரோபதிக்கு கொடுக்கும் திட்டத்தையும் கொடுத்திருக்கிறோம் என்று கூறினார்.
நோச்சுரோபதி மருத்துவத்தையும், யோகாவையும் சிலர் மதம் சார்ந்து கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இது மருத்துவத்திற்கே எதிரானது என்ற அவர்
இந்தத்துறைகளை மதம் சார்ந்து கொண்டு செல்வது இயங்கியலுக்கு எதிரானது என்றும் சாடினார்.
சமூக நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு நிதிகளை ஒதுக்குகிறது என்றும் மத்திய அரசும் சமூக நீதித்துறையின் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய நலத்திட்டங்களை மேம்படுத்துதல் வீடு கட்டுதல் ஜாதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் வன்னியரசு பேசும்பொழுது சில யோகா நிறுவனங்கள் யோகா கற்று தருவது என்று கூறி மதம் சார்ந்த கருத்துக்களை பரப்புவதாக கூறியிருக்கிறார். மருத்துவம் மருத்துவமாக இருக்க வேண்டும் யோகா யோகாவாக இருக்க வேண்டும் அதற்குள் மதம் சார்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதை தான் சுட்டிக்காட்டினார் என்று தெரிவித்தார்.

மதசார்பற்ற கொள்கை என்ற ஒன்றை கடைபிடிக்கும் பொழுது ஒரு அமைப்போ அல்லது அரசோ மதம் சார்ந்த கருத்து பிரச்சாரம் செய்யக்கூடாது அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று தெரிவித்தார்.
பட்டியல் இன மக்களுக்கான முதலமைச்சர் பதவி என்பது எப்பொழுது வரும் என்ற கேள்விக்கு, அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும் என்றும் அவ்வாறு வலிமை பெறுகின்ற பொழுது அந்த வாய்ப்பு கிட்டும் என்று நம்புவதாக பதிலளித்தார்.
முதலமைச்சர் உடனான கூட்டத்தில் துணை முதலமைச்சர் குறித்தான நகர்வுகள் அல்லது பேச்சு வார்த்தை இருக்குமா என்ற கேள்விக்கு அதை நீங்கள் வந்து கலந்து கொண்டு பரிசீலியுங்கள் என்ற நகைச்சுவையாக பதில் அளித்தார்.








