கடந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடித்துள்ளனர். ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில். இந்த படம் வெளியான நாள் முதல் நேற்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இந்த படம் 34.2கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 22.3கோடி வசூல் செய்துள்ளது.