விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் கிராமத்தில் அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

அதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆணையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பு என்ற லட்சுமி நாராயணன் உள்ளிட்ட அதிமுக கட்சியினரும் கலந்து கொண்டனர்.

