• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அகழாய்வில் கிடைத்தத பண்டைய கால பொருட்கள்

ByK Kaliraj

Feb 5, 2025

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டையில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறுகிறது.
20அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 20க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 செமீ ஆழத்தில் செங்கற்கள் குவியலும் தென்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் செங்கல் கட்டுமானம் கிடைக்கப்படும் எனவும் தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.