• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

குடியிருப்பு பகுதிகளில்மழைநீர் செல்வதை முத்துராஜா நேரில் சென்று ஆய்வு..,

ByS. SRIDHAR

Nov 25, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் காட்டு புது குளத்திற்கு வரும் மழைநீர் பெரியார் நகர், கம்பன் நகர் மாணிக்கம் நகர், பூங்கா நகர் குடியிருப்பு பகுதிகளில் செல்வதை தடுக்கும் வண்ணமாக கடந்த கால ஆட்சியில் சுமார் 3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலை, பெரியார் நகர் சாலை வழியாக சந்திரமதி வாய்க்கால் வரை மழை நீர் வரத்து வாரி நடைபெறுகின்ற பணி தற்போதைய ஆட்சியாளர்களால் மந்த நிலையில் நடைபெறுவதால் குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் பணியின் பொழுது ஏற்படும் உடைப்புகளை சரி செய்து வழங்க, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில்,

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு Dr.வை முத்துராஜாMBBS MLA அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி விரைந்து முடித்திருமாறு கேட்டுக் கொண்டார்.,

ஆய்வுப் பணியில் உடன்…. மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில்BCom அவர்கள், மாநகராட்சி பொறியாளர் திரு ரத்தினவேல் அவர்கள் மற்றும் மாநகராட்சி இணை பொறியாளர் கலியகுமார் அவர்கள் எடுத்துக் கூறினார்…உடன் கம்பன் நகர் நலச்சங்க நிர்வாகிகள், மற்றும் பெரியார் நகர் பொதுமக்கள். கலந்து கொண்டனர்