தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், கேரட், வெங்காயம் – தலா கால் கிலோ, முருங்கைக்காய் – 2, காலிஃப்ளவர் – 1, பீன்ஸ், பூண்டு – தலா 100 கிராம், பச்சை மிளகாய், இஞ்சி – தலா 25 கிராம், பெரிய தேங்காய் – 2, எலுமிச்சம்பழம் – 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை சிட்டிகை, சீரகம் – 25 கிராம், நெய், வனஸ்பதி. – தலா 100 கிராம், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்து… முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும். பாசிப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். கடாயில் வனஸ்பதியைப் போட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து, நுரையாக வந்ததும் இறக்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அதில் கொட்டிக் கலந்தால்… சுவையான சொதி ரெடி!