அரை டம்ளர் பாசிப்பருப்பை இளம் வறுப்பாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். அரை கப் பால் மற்றும் கரைத்த நாட்டு வெல்லத்தை பருப்புக் கலவையில் சேர்க்கவும். இறுதியில் ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்தால் மருத்துவ குணமிக்க கஞ்சி தயார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேறிவருபவர்களுக்குச் சிறப்பான உணவாக இது அமையும். எளிதில் செரிமானமாகி உடலுக்கு வலு கொடுக்கும்.