

ஆப்பிள் மில்க்ஷேக்:
தேவையானவை:
ஆப்பிள் – ஒன்று, காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), சர்க்கரை – 3 டீஸ்பூன்.
செய்முறை:
ஆப்பிளை தோல் நீக்கி துருவவும். ஆப்பிள் துருவல், சர்க்கரை, பால் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

