• Sun. Apr 2nd, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Apr 28, 2022

எலுமிச்சை – ஏலக்காய் ஜூஸ்:

தேவையானவை:
குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த சர்க்கரை – 5 டீஸ்பூன், உப்பு – கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்).
செய்முறை:
குளிர்ந்த நீருடன் பொடித்த சர்க்கரை, உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு குளூக்கோஸ் பவுடர் சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *