நடிகர் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் முதலில் ஐஸ்வர்யாராயை காதலித்து வந்தார். ஆனால் அவருடனான காதல் கைகூடவில்லை.
பிறகு பல நடிகைகளுடன் இவரின் பெயர் அடிபட்டது. ஆனால் எதுவும் உண்மை இல்லையாம்.
இந்நிலையில் சல்மான் கான் நடிகை சோனாக்ஷி சிம்ஹாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருவரும் ரகசியமாக மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி திரையுலகிற்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தபோது இப்புகைப்படங்கள் போலி என தெரியவந்துள்ளது. இதுபோல பலரின் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.