மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் முற்றிலும் சிதைந்து விட்டது என சொல்லாம் .இன்று 55-வது நாளாக உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பொதுமக்கள் அண்டைநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போரில் ரஷிய படைகள் உக்ரைனின் மரியபோல் நகர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில்ரஷிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் ராணுவம் அவர்கள் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என நம்பி ரஷிய முற்றுகைக்கு எதிராக சண்டையிடும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் உங்கள் அதிகாரிகள் எந்த உத்தரவையும் தரப்போவதில்லை. இப்போதே உங்களது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையுங்கள்.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா- உக்ரைன் போர்காரணமாக உலகபொருளாதாரம் பாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் உக்ரைன் மக்கள் மட்டுமல்ல உலகமே போர் எப்போது முடிவுக்குவரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.
உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை
