• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரஷ்யா ஒருபோதும் சண்டையை விரும்புவதில்லை – அதிபர் புதின்

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பி வரும் நிலையில், “ரஷ்யா ஒருபோதும் போரை விரும்புவதில்லை” என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணையவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்தது. அதன் உச்சக்கட்டமாக, உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான படை வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ரஷ்யா ஈடுபட்டது. அதுமட்டுமின்றி, உக்ரைன் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவத் துருப்புகளையும் அந்நாடு நிலை நிறுத்தியது. இதனால் உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா தாக்கும் என்ற சூழல் உருவானது.