

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
நாடு முழுவதும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்று 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்துக்கும் மேல் இயக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் 4 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கும் வரும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி அதாவது புதிய விதி 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.