• Wed. Apr 24th, 2024

கடன் வாங்கித்தருவதாக ரூ2 லட்சம் மோசடி-போலீசார் விசாரணை

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த நபர்….காவல்துறையினர் விசாரணை…
கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறல்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள RMS காலனி பகுதியை சேர்ந்த வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியர் ஆன இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும், கடன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தான் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து செந்தில் முருகன் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து 15 லட்ச ரூபாய் கடன் வாங்கி தருவதாக அந்த நபர் கூறியுள்ளார்
மேலும் அந்த கடனுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கு பத்திர ஆவணங்கள் வாங்க வேண்டும். மேலும் அதற்கான பணத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார் இதனை நம்பி வீரபாண்டி பணத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் செல்போனில் பேசிய நபர் நேரில் வந்து வீரபாண்டியிடம் இருந்து பணத்தை வாங்கியுள்ளார்.


இதனையடுத்து அந்த நபர் பணத்தை வாங்கிக் கொண்டு கருவூலத்திற்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வீரபாண்டி சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் 22ஆம் தேதி இதே போன்று 50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் மூன்று லட்ச ரூபாய் பணத்தை லாவகமாக ஏமாற்றி திருடிச் சென்ற சம்பவத்தில் குற்றவாளியை இதுவரை கைது செய்யவில்லை குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர் ஆனால் இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்படாத நிலையிலேயே உள்ளது இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கூட காண முடியவில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்று கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே விரைந்து மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது மட்டும் அல்லாமல் அது சரியான முறையில் இயங்குகிறதா பராமரிக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *