• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரூ.101 உயர்ந்த சிலிண்டர் விலை

Byமதி

Dec 1, 2021

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி குறைத்தது மத்திய அரசு, கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தியது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்திருக்கிறது. இதனால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.