பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. தற்போது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.
சட்டசபையில் சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை எல்லா வயது திருநங்கையர்களுக்கும் வழங்க வேண்டும். திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவர் திருநங்கை/திருநம்பி என்று அறிந்து அதை வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகிறார்கள். இதனால் பலர் ஆதரவற்றவர்களாகிவிடுகிறார்கள். பலர் சாலைகளில் உதவி வேண்டி நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்த ஏற்பாடு செயய் வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பொதுவாக திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் இதுகுறித்து பேசு வது வழக்கம். நேற்று கனிமொழியின் இந்த டாப்பிக்கை சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் கவனிக்கவைத்தது
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
