

இன்று உலக பூமி தினம் . இதனை சிறபிக்கும் வகையில், பூமிக் கோளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் படத்தின் மூலம் விளக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
கடந்த 1970 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பூமியின் சூற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் காக்கும் நோக்கில் மக்களிடையே பல்வேறு விழிப்புணவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கூகுள் நிறுவனம் உலகின் முக்கியமான நாட்களைக் குறிப்பிடும் வகையில் தனது டூடுல் மூலம் எடுத்துச் சொல்லி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் உலக பூமி தினத்தை குறிப்பிடும் வகையில் டூடுலை பகிர்ந்துள்ளது கூகுள். இதில் பூமியின் காலநிலை மாற்றத்தின் காரணமாககடந்த 20 ஆண்டுகளி பூமி எப்படி மாறிப்போனது என்பதை காட்டுகின்றன.இந்தப் படங்கள் கூகுள் எர்த் மற்றும் மேலும் சில சோர்ஸ்களில் இருந்து பெறப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதில் தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலை மற்றும் கிரீன்லாந்தின் செர்மர்சூக் (Sermersooq) பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் காட்சியின் படம், ஆஸ்திரேலியாவின் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை திட்டுகளின் நிலை, ஜெர்மனியின் அழிந்து வரும் ஹார்ஸ் காடுகளின் நிலை மாதிரியானவை இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஸ்லைட் ஷோ போல கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகையில் காட்சி அளிக்கிறது.
காலநிலை மாற்றத்தின் கொடூரமான விளைவுகளை தவிர்க்க அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்படுவது அவசியம் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

