• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

7 வயது சிறுவனுக்கு உயிர் காக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை ராயல் கேர் மருத்துவமனை சாதனை..,

BySeenu

Jun 25, 2026

இதய தசைகள் பலவீனமடைந்து இதயத்தின் செயல்திறன் குறையும் டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy – DCM) எனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சிறுவனுக்கு நிய் முற்றிய நிலைக்கு சென்ற பின்னரே அது குறித்து அறிந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.

ராயல் கேர் மருத்துவமனையின் இதய மற்றும் இரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப் செயலிழப்பு நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு உறுப்புகளிலும் சிக்கல்கள் உருவாகின.உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அவருக்கு ECMO எனப்படும் மேம்பட்ட இதயம் – நுரையீரல் ஆதரவு கருவி பொருத்தப்பட்டது.

பின்னர் நீண்டகால காத்திருப்பிற்குப் பிறகு, மூளைச்சாவு அடைந்த ஒரு நபரிடமிருந்து இதயம் கிடைத்து அவரது இதயத்தை சிறுவனுக்கு பொருத்தப்பட்டது.

இதனால் அந்த சிறுவன் மறுவாழ்வு பெற்று நலமுடன் உள்ளார். ராயல் கேர் மருத்துவமனைக்கு அந்த சிறுவனின் குடும்பத்தார் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.