• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ; 60 வயது நபர் கைது !!!

BySeenu

Jun 25, 2026

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண் தனியார் கல்லூரியில் தற்காலிக தேர்வு கண்காணிப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவரும் இவரது பெண் நண்பர்களும் விராலியூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

பக்கத்து வீட்டில் அருணன் 60 என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை உடல்நிலை சரியில்லாமல் உள்ள அருணனின் மனைவியை பார்க்க இளம்பெண் சென்று உள்ளார்.

சமையல் அறையில் இளம் பெண்ணிடம் அருணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். அவர் கூச்சலிட்டு, அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இளம் பெண் அளித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் அருணை கைது செய்தனர்.