தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக கொலை கொள்ளை மற்றும் உண்டியல் உடைப்பு மரக் கடைக்கு தீவைப்பு என குற்றச்சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி பீதியில் உள்ளனர். கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை போவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 180000 கொள்ளை போனது இது அடங்குவதற்குள் நேற்று ஆரியங்காவு கருப்பசாமி கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை போனது இக்கோவிலில் தினமும் ஒரு நேர பூஜை மாலை வேளையில் மட்டுமே நடத்தப்படும் என்பதால் பூசாரி சந்திரன் கோவிலை திறந்தார். அப்போது பின்புற கேட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனே கருவறை அருகில் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்ட சந்திரன் கோவில் நிர்வாக பொறுப்பாளர்களான ராமச்சந்திர பூபதி மற்றும் அங்குசாமி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர.; மேலும் ஒரு மாத காலத்தில் சிந்தாமணியில் உள்ள கங்கை அம்மன் கோவில் சித்தி விநாயகர் கோவில் இசக்கியம்மன் கோவில் புளியங்குடி இரட்டை பிள்ளையார் கோவில் சுடலை மாடன் கோவில் சந்தனமாரியம்மன் கோவில் முப்புடாதி அம்மன் கோவில் இரட்டை பிள்ளையார் கோவில் சுடலை மாடன் கோவில் சந்தனமாரியம்மன் கோவில் முப்புடாதி அம்மன் கோவில் கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சில கோயில்களில் இரண்டு முறை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது அதனால் பக்தர்கள் மன வேதனையில் உள்ளனர் புளியங்குடி பகுதியில் தனியார் நிறுவனத்தால் இருபத்தி எட்டு சிசிடிவி கேமராக்கள் காவல் துறைக்கு வழங்கப்பட்டது. அதை சாலைகளிலும் மற்றும் முக்கிய பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சில கேமராக்கள் திசைமாறி கிடக்கிறது. சில கேமராக்கள் பழுதாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது தொடர்ந்து ஒரே நபரே கொள்ளையடிப்பது தெரியவருகிறது. அதனால் உடனடியாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.