நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் 15 வார்டுகளைக் கொண்டு கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைஅருகே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில்போடப்பட்டு வருகின்றன. குப்பைகள் ஒரு நாள் விட்டு மறுநாள் வாகனங்கள் மூலம் சேகரித்து கோரப்பாடு பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் சென்று கொட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு மேலாக குப்பைகள் அள்ளப்படாததால் குரங்குகள் காட்டு பன்றிகள் வனவிலங்குகள் வளர்ப்பு மாடுகள் என குப்பைகளை இழுத்து சாலையில் சிதற செய்கின்றன.
வழக்கம்போல் தூய்மை பணியாளர்கள் சிதறி குப்பைகளை குப்பைத் தொட்டியில் நிரப்பி விட்டு செல்கின்றன பத்து நாட்களுக்கு மேலாகியும்அல்லப்படாத குப்பைகளால்துர்நாற்றம் வீசி வருகிறது நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது குப்பைகளை அகற்றக் கோரி தகவல் தெரிவித்தும் அகற்றப்படாமல் உள்ளது கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான வாகனம் பழுது காரணமாக குப்பைகள் அல்ல பட வில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். தனியார் வாகனங்கள் மூலம் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்