• Fri. Mar 29th, 2024

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு

ByA.Tamilselvan

May 8, 2022

தமிழகத்தில் அத்தியாவசி பொருட்கள் விலைஉயர்ந்துள்ள நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.
தமிழக்தில் கடந்து 3 மாதங்களாக கோடைகாலம் காரணமாக கடுமையான வெப்பநிலை உயர்ந்துள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் காரணாக காய்கறிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக் உயர்ந்து வரும் பொட்ரோல் ,டீசல் விலையேற்றம் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும்.
. சென்னையில் உள்ளிட்ட தமிழகமுழுவதும் தக்காளி காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிலும் தக்காளி விலை கடந்த 2 வாரங்களாக அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக 2 வாரங்களுக்கு முன்னதாக ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளியானது தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி மட்டுமின்றி காளிபிளவர், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயந்துள்ளது. காளிபிளவர் விலையை பொறுத்தவரையில் இன்றைய தினம் கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்த்தில் ரூ.20-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. முட்டை கோஸ் விலையை பொறுத்தவரையில் கடந்த வாரம் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. உருளை கிழங்கை பொறுத்தவரையில் கடந்த வாரம் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வெங்காயம், கேரட், பீட்ரூட், போன்றவைகளின் விலை குறைந்துள்ளது. வெங்காயம் கிலோ ரூ.20 வரையிலும், கேரட் ரூ. 20 வரையிலும், பீட்ரூட் ரூ.25 வரையிலும் வ்விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இதன் விலை சற்று குறைந்துளளதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்திற்கு பிறகு காய்கறிகளின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *