• Fri. Apr 26th, 2024

ஊழியரைப் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: ஸ்விக்கி

Byவிஷா

Jul 7, 2022

மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபரை ஸ்விக்கி நிறுவனம் வலை வீசி தேடி வருவதுடன், அந்த நபர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்து வரும் மழைக்கு மத்தியில் ஸ்விக்கி டெலிவரி மேன் ஒருவர் குதிரையில் சவாரி செய்து உணவு வழங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்விக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. தங்களால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவரை கண்டிபிடித்து தருபவருக்கு ரூ. 5,000 வெகுமதி அளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு காருக்குள்ளிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்கு மத்தியில் ஸ்விக்கி பையில் உள்ள உணவை ஒரு நபர் குதிரையில் டெலிவரி செய்யும் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகுஇ ஸ்விக்கி இதைப் பற்றி பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆனது முதல் ஸ்விக்கி நிறுவனத்துக்கு பல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதன் மூலம் ஸ்விக்கிக்கு நல்ல பெயரும் விளம்பரமும் கிடைத்துள்ளது. ஸ்விக்கி இதற்கு வேடிக்கையான மற்றும் வித்தியாசமான முறையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது பற்றி கூறிய ஸ்விக்கி “நெட்டிசன்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு. அடையாளம் அறியப்படாத நபர் ஒருவர்இ ஒரு வெள்ளைக் குதிரையில் மிகவும் நம்பிக்கையுடன் அமர்ந்துஇ எங்கள் மோனோகிராம் செய்யப்பட்ட டெலிவரி பையை எடுத்துச் செல்லும் சமீபத்திய அமெச்சூர் வீடியோ எங்கள் கவனத்துக்கு வந்துளது. அந்த நபரை அடையாளம் காண உதவி செய்பவருக்கு ரூ. 5,000 வெகுமதி அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது” என்று ஸ்விக்கி குறிப்பிட்டுளது.
குதிரையில் அமர்ந்து ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நபரின் அந்த வீடியோ இணையவாசிகளுக்கு இடையே பல வித ரியாக்ஷன்களை ஏற்படுத்தியது. அவரது கடமை உணர்ச்சியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *