
முத்தியால்பேட்டை முன்னாள் எம்எல்ஏ நந்தா. சரவணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடலூர் செல்வதற்காக புதுச்சேரி வழியாக வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவரை நேரில் சந்தித்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன், திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டா.ர்
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக கடலுரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் அவருக்கு புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேட்டில் திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டல் அக்கார்டுக்கு வந்தார். அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்த அவரை திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா, சரவணன் அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் திமுக அவை தலைவர் எஸ்.பி. சிவக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத் செந்தில்குமார் அனிபால் கென்னடி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
