• Thu. Apr 25th, 2024

அதிமுக அரசின் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து தீர்மானம்..!

Byவிஷா

Apr 15, 2022

தாலிக்கு தங்கம், அம்மா மகளிர் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனைக்கினங்க விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டியில் நடைபெற்றது.. விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.கே.என்.செல்வம் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவரும், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளருமான கௌரிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் விருதுநகர் மேற்கு மாவட்ட , ஒன்றிய, மாநகர, நகர, மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மணிகண்ட பிரபு சிறப்பாக செய்திருந்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்மானம் 1, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசிகளோடு தமிழகத்தில் மீண்டும் அஇஅதிமுகவின் தலைமையிலான பொற்கால ஆட்சி அமைய விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றபட்டது. தீர்மானம் 2, அதிமுக ஆட்சியின் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்ற நலத்திட்ட பணிகள், தொகுதி வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நலப்பணிகளை தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலமாக இல்லந்தோறும் கொண்டு சேர்க்கும் விதமாக களப்பணி அமைய வழி வகை செய்யப்படும். தீர்மானம் 3, பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினங்களில் அவர்களின் சாதனைகளையும், புகழையும. போற்றும் விதமாக சிறப்பான வகையில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களின் புகழை மேலோங்கி செய்திட வழிவகை செய்யப்படும். தீர்மானம் 4, சமூக வலைதளங்களையும், தொலை தொடர்பையும் சரியான முறையில் பயன் படுத்தி எதிரிகளையும், உதிரிகளையும் சரியான முறையில் கையாளும் வகையில் நாகரீகமாக எதிர்கொண்டு அவர்களுக்கான தக்க பதிலடி தக்க தரூணத்தில் கொடுக்கவும்.
திமுக அரசின் சொத்துவரி உயர்வு கண்டித்தும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களும், மகளீர்க்கான திட்டங்களான திருமண உதவித்தொகையுடனான தாலிக்கு தங்கம், அம்மா மகளீர் இருசக்கர வாகன திட்டத்தை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .தீர்மானம் 5, விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்திலுள்ள மாநகர, வட்ட, நகர, ஒன்றிய ,பேரூர் , வார்டு, கிளைக்கழத்தில் நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்.அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கழக நிகழ்வுகளில் கலந்து கொண்டு அந்த நிகழ்வினை கழக வலைதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் கட்டாயம் பகிர வழி வகை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *