தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இனி நடக்காது என்ற கீதாஜீவன் இதற்காக சமூக நலத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவித்தார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலா
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது
- இலக்கியம்
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்
- படித்ததில் பிடித்தது
- பொது அறிவு வினா விடைகள்