போராடும் தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்துப்பேசி தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கி நடவடிக்கை எடுக்க அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலைவாய்ப்பு என்ற வகையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞருக்கு வழங்கிட திமுக முயற்சி மேற்கொள்ளும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அறவித்துவிட்டு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் , அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஆய்வக உதவியாளர்களை பணியிலிருந்து நீக்குவத்றகான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று முதல் அலையின்போது 2020ஆம் ஆண்டு மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சரக்கும்நீரை சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.தங்கள் உயிரை துச்சமென நினைத்து வீடு வீடாக சென்று பிரசோதனை மாதிரிகளை சேகரித்தனர்.அது மட்டுமில்லாமல் தடுப்பூசிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பினர்.இந்த சூழ்நிலையில் நவம்பர் 30ஆம் தேதி சுகாதார துணை இயக்குனர் இன்று தான் உங்களின் கடைசி பணி நாள் என்றுக் கூறி மாத சம்பளம் 8000 ரூபாய்தான் என்றும் கூறியுள்ளார்.ஆனால் 4 மாதங்களாக அந்த பணத்தையும் கொடுக்கவில்லை என்பது ஆய்வக உதவியாளர்களின் கூற்று.இதை முன்னரே தெரிவித்திருந்தால் வேறு வேலையை தேடி இருப்போம் என்று ஆய்வக உதவியாளர்கள் கூறியுருப்பதாக பத்திரக்கைகளில் வெளியானது.இதற்காக 150 ஆய்வக உதவியாளர்கள் சென்னையிலுள்ள மருத்துவப் பணிகள் இயக்கத்தின் அலுவலகம் முன் போராட்டமும் நடித்தினர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியிருப்பாதவது தொற்று கண்டறியும் மாதிரிகளை சேகரிக்கும் தேவை குறைந்துவிட்டது, கணிசமாக தடுப்பூசியும் மக்கள் செலுத்திக்கொண்டதால் இனி மாதிரி சேகரிக்கும் பொருட்டு இருக்காது என்றும் அது போக நிதி பற்றாகுறையாலும் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.
எனவே தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு தலையிட்டு போராடும் தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்துப்பேசி தர வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஓ.பன்னீர் செல்வம் அதில் கேட்டுக்கொண்டார்.