• Thu. Mar 28th, 2024

மீண்டும் பயன்பாட்டுக்குவந்த ரேடார் -இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் !!!!

ByA.Tamilselvan

Aug 27, 2022

4 ஆண்டுகளுக்கு பிறகு ரேடார் பயன்பாட்டுக்கு வருவதால் இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் எனதகவல் வெளியாகிஉள்ளது.
தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய பங்கு வகிக்கிறது.மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகரும் திசை, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் பழுதடைந்தது. இந்த ரேடாருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் 4 ஆண்டுகளாக இந்த ரேடார் செயல்படாமல் இருந்தது.தற்போது சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள ரேடாரை பழுது பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த ரேடார் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இனி மழைநிலவரத்தை துல்லியமாக அறிலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *