• Sat. Feb 15th, 2025

சிபிஎஸ்இ பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ByG.Suresh

Jan 26, 2025

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளியில் 76ஆவது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் டாக்டர்.பால. கார்த்திகேயன் தலைமை ஏற்ற இவ்விழாவில் சிவகங்கை, STS புரோமோட்டார்ஸ் & பில்டர்ஸ் இன் தலைவர் தங்க செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் தொடக்க நிகழ்வாக பள்ளியில் பயிலும் போதே பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற பத்தாம் வகுப்பு மாணவி செல்வி. திவ்யநாயகி முன்னெடுப்பில் சிறப்பு விருந்தினர், பள்ளியின் கலைத் திட்ட இயக்குநர் கங்கா கார்த்திகேயன் மற்றும் பள்ளியின் முதல்வர் பாலமுருகன் நிர்வாக இயக்குனர்கள் கலைக்குமார், செந்தில் குமார் மற்றும் பள்ளியின் மேலாளர் தியாகராஜன் ஆகியோர்களை சிறப்பு அணிவகுப்பு மூலம் விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பதினோராம் வகுப்பு மாணவி செல்வி.நிவேதா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு விருந்தினர் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தையும் சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் நினைவு கூறும் வகையில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் முன்னதாக பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் மௌண்ட் லிட்ரா மொபைல் செயலியில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக இரண்டாம் வகுப்பு மாணவன் சர்வேஷ் கலைச்செல்வன் நன்றி உரை கூறினார். விழா நாட்டுப் பண்ணுடன் முடிவடைந்தது. மாணவர் அணிவகுப்பு பேரணியை உடற்கல்வி ஆசிரியர் திரு.தினேஷ் குமார் சிறப்பாக செய்திருந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.