குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் MLA செந்தில் நாதன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 76 வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். அஇஅதிமுகவை சேர்ந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தனது சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், நகரச் செயலாளர் ராஜா ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, ஸ்டீபன் அருள், கோபி, ராஜ்குமார் , சன்னாசி குழந்தை ,மோகன், வி. ஆர். பாண்டி, கே. பி. முருகன், பாம்பே குமார், முருகானந்தம், சசிகுமார், சரவணன், செந்தில், மோகன்குமார், தங்கம், மானாமதுரை நாகராஜன், மாரிமுத்து ஒன்றிய செயலாளர் சிவசிவ, இளையராஜா, கோட்டையன் அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
