இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை நகர மன்ற தலைவர் ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நகராட்சி துப்பரவு அலுவலர் அப்துல் ஜாஃபர், நகர்மன்றத் துணைத் தலைவர் கார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் C.M.துரை ஆனந்த் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் சான்றிதழ்கள் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியைமரியசெல்வி , நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், வீரகாளை, பாக்யலெட்சுமி விஜயகுமார், வீனஸ் ராமநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
