• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் அறிக்கை..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2025


தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை எந்த நிலையில் நடைபெறுகிறது என்பதை ஒப்பீடு செய்து அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை பாராட்டி ஆசிரியர்களை போற்ற வேண்டும் – சா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை
~~~
ஆசிரியர்களுக்கு பல விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் கட்டுக்குள் கொண்டுவருவது மிகுந்த சவாலாக உள்ளது. இவர்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் மாணவர்களின் பெற்றோர்களை முதலில் பள்ளிக்கு வர வழைவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளியில் 75% விழுக்காடு மாணவர்களின் பெற்றோர் தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட வருவதோடு சரி அதோடு பள்ளிக்கு வந்து பிள்ளைகளின் கல்வித்தரத்தை அறிவதேயில்லை.

அப்படி கட்டப்பட்டு வர வழைத்தால் ஏன் எங்களை தொல்லை கொடுக்கின்றீர்கள் என சண்டையிடுகிறார்களே தவிர பிள்ளைகளின் தரத்தை கேட்டறிவது இல்லை இப்படிதான் பெற்றோர்களின் நிலை உள்ளது. மாணவர்கள் தனியார் பள்ளிக்கு நிகராக திறன் பெற வேண்டுமானால் பெற்றோர்கள் பள்ளிக்கு வர வைத்து மாணவர்கள் கல்வி சார்ந்த முன்னேற்ற நிலைக் குறித்து அறிய வைக்க ஏற்பட்ட செய்து பெற்றோர்களை வர வைக்க வேண்டும்.

அப்போது தான் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்படுவார்கள், ஆசிரியர்களும் சுதந்திரமாக செயல்பட்டு ஒழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க இயலும், பொற்றோர்களுக்கு கட்டுப்படதாத மாணவர்களும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொல்லி விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டு பயம் உண்டாகும், தானாக படிக்கும் எண்ணத்தை உருவாக்கி தன்னை தயார்படுத்தி படிக்க ஆரம்பிப்பார்கள்..

அந்தந்த மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவளர்களின் மூலமாக பெற்றோர்கள் சந்திப்பு கூட்டங்களை பள்ளி அளவிலும் ஒன்றிய அளவில் நடத்த வேண்டும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தானாக பெற்றோர் சந்திப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ள வரவே மாட்டார்கள் ஆதலால் மாணவர்களின் பெற்றோர் பட்டியலை அந்தந்த பள்ளிகளில் பெற்று அந்தந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வழியாக ஒவ்வொரு கிராமமாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாகவும் பெற்றோர்களை கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள செய்ய வேண்டும் , பின்பு அவர்களுக்கு அறிவுரை வழங்கி ஒவ்வொரு தேர்விற்கு பிறகு பெற்றோர் கட்டாயம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளின் தேர்ச்சி நிலை குறித்து அறிய செய்ய வேண்டும், தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் ஏன் தேர்வில் தேர்ச்சி அடைய வில்லை, தேர்ச்சி அடைந்தும் மாணவர்கள் ஏன் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை ஆசிரியர்கள் இடத்தில் கேட்டு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர்களிடம் கேட்டு அதன்படி தன் பிள்ளைகளைத் தயார்படுத்த உதவ வேண்டும்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பாட ஆசியர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது , மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு எப்படி பள்ளியின் தலைமையாசிரியரும் பாட ஆசிரியர்களும் பொறுப்பு என்று கருதி விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ அதே நிலையில் தானே பெற்றோர்களிடமும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும் அது தானே சரியாக இருக்கும்.

அதேபோன்று தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒப்பிட்டு அரசு பள்ளி ஆசிரியர்களை குறை சொல்கிறார்கள் இது எப்படி ஒப்பிட முடியும், தனியார் பள்ளிகளில் பிரி கேஜி வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு நடத்தி தேர்ச்சி அடையும் மாணவர்களை மட்டுமே பள்ளியில் பயில சேர்க்கையை உறுதி செய்கிறார்கள், மேலும் பல தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பட்டப்படிப்பு படித்திருந்தால் மட்டுமே பள்ளிகளில் சேர்வதற்கான நுழைத் தேர்வுக்கான படிவமே கொடுக்கின்றனர், இந்த அளவில் சேர்க்கை நடைபெற்றும் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்களை பல காரணங்களை சொல்லி மாற்று சான்றிதழ்(TC) கொடுத்து பாதியிலேயே அனுப்பி விடுகின்றனர். ஒவ்வொரு தேர்வின் போதும் பெற்றோர்கள் அழைத்து விடைத்தாள்களை காண்பித்து மாணவர்கள் நிலையை அறிய செய்கிறார்கள், மாணவர்கள் ஒழுங்கினமான செயலில் ஈடுப்பட்டால் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து மீண்டும் மறுநாளும் பெற்றோர்களை அலைக்கழிப்பு செய்து பிறகே பெற்றோர்களைச் சந்திக்க அனுமதிக்கின்றனர். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கு நடுவில் தான் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 100% விழுக்காடு தேர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் அரசு பள்ளிகளில் அப்படி இல்லை மாணவர்கள் எந்த சூழ்நிலையில் சேர்க்கைக்கு வந்தாலும் அவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் , தன் பிள்ளைகளை பள்ளி சேர்த்து விடுவோது சரி அதன்பிறகு மாணவர்கள் எந்த நிலையில் படிக்கின்றனர் என்ன மதிப்பெண் எடுக்கின்றனர் பள்ளியில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி அடைகிறார்களா, இல்லையா என்று பள்ளிக்கு வந்து கேட்பதே இல்லை, ஒவ்வொரு தேர்வின்போதும் பல முறை பெற்றோர்களை அழைத்தும் வருவது இல்லை , அப்படி வந்தாலும் ஏன் சும்மா அழைத்து தொல்லை கொடுக்கின்றீர்கள் என தலைமை ஆசிரியரையும் ஆசிரியர்களையும் மிரட்டிவிட்டு போவார்கள், பல மாணவர்கள் வருகை என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது, வீட்டிற்கே சென்று மாணவர்களை அழைக்கும் போது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் ,ஒரு சில பெற்றோர்கள் வீட்டில் இருந்தாலும் சரியான முறையில் பதில் அளிக்க மாட்டார்கள் மிரட்டும் தொனியில் பதில் அளிப்பார்கள் ,ஒழுங்கினமாக நடந்துக் கொள்ளும் சில மாணவர்கள் பெற்றோரை அழைத்து வர சொன்னால் பெற்றோருடன் உறவினர் என்ற பெயரில் வெளியாட்களையும் அழைத்து வந்து தலைமை ஆசிரியரையும் ஆசிரியர்களையும் மிரட்டுவார்கள், அடிக்க கூட செய்வார்கள், ஒரு சில பெற்றோர் யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தார்கள்? என மிரட்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிப்பேன் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலரிடம் புகார் அளிப்பேன் என மிரட்டுவார்கள் அப்படியும் நீங்கள் சென்று புகார் அளியுங்கள் என்று பெற்றோர்களை அனுப்பினால் அங்கும் பெற்றோர்களுக்கு சாதகமாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தான் கடிந்து கொள்வார்கள். மாணவரை ஏன் திருப்பி அனுப்பினீர்கள் என கண்டிப்பார்கள் சில மாணவர்கள் சேர்க்கை கூட பெற்றோர்கள் வருவது கிடையாது ,அவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் நிலை, பல மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக இரவில் வேலைக்கு சென்று காலை பள்ளிக்கு வருகின்ற சூழலும் இருக்கிறது.

மேலும் தனியார் பள்ளிகளில் ஒழுங்கினமான மாணவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றறிதழ் கொடுத்து ஏதேதோ காரணம் சொல்லி வேறு பள்ளியில் சேருங்கள் என குற்றம் சாட்டி அனுப்பப்படும் மாணவர்களுக்கும் அரசு பள்ளிகள் தான் புகலிடம். அவர்களும் அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட சூழலில் அரசு பள்ளி செயல்படுகிறது இதுபோன்ற சவாலான சூழ்நிலையில் தான் ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள், இதுபோன்ற நிலையில் வரும் மாணவர்களை நல்வழி படுத்தி ஒழுக்க நெறியை கடைப்பிடிக்க செய்வது என்பது சாதாரண காரியமா என சிந்தித்து பார்க்க வேண்டும், மாணவர்களை கண்டிப்பதில் பல கட்டுபாடு விதிகள் பள்ளிக்கல்வித்துறையால் விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் மாணவர்களை பல முயற்சிகளுக்கு நடுவே பாடத்தை நடத்தி வருகிறார்கள்,

தனியார்பள்ளி நிலை அப்படியில்லை பெற்றோராக இருந்தாலும் மாணவர்களாக இருந்தாலும் அனுமதியில்லாமல் நுழைவாயிலை ( GATE ) தொட்டுக் கூட பார்க்க முடியாது, அரசு பள்ளியில் யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி வருகிறார்கள் ஒரு அச்ச உணர்வுடனே பணி செய்துவருகிறார்கள்.

இப்போது தங்களுக்கு தெரிகிறதா தனியார் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி ஏன் 100% விழுக்காடு பெறுகிறார்கள் என்று, தனியார் பள்ளிகளை போன்று மாணவர் சேர்க்கையை அரசு பள்ளிகளில் பின்பற்றினால், தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளி அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் 100% விழுக்காடு தேர்ச்சி அடையவைப்பார்கள், தேர்ச்சி அடைவது மட்டும் மல்ல லட்சக்கணக்கான மாணவர்கள் 90% விழுக்காட்டிற்கும் அதிகமான மதிப்பெண் எடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒப்பிட்டு பாருங்கள் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை எப்படி , தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை எப்படி தனியார் பள்ளிகளின் கட்டுப்பாடு எப்படி , அரசு பள்ளி மாணவர்கள் நிலை எப்படி என்று நினைத்து பார்க்க வேண்டும் , இந்த சூழ்நிலையிலும் அரசு பள்ளி மாணவர்களை பல சவாலுக்கு மத்தியில் கட்டுக்குள் கொண்டுவந்து 90 % விழுக்காடு தேர்ச்சியை எட்டி பிடித்திருப்பது சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு சாதாரமானது அல்ல மாணவர்களை கட்டுப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வரும்போது பல இன்னல்களை சந்திக்கின்றனர் ஆசிரியர்கள் மீது வீண் பழி வழக்கு துறைரீதியிலான நடவடிக்கை பல சிக்கல்களுக்கு ஆளாக்கப்பட்டு தான் இந்த இலக்கை அடைகிறார்கள்.

சில இடங்களில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம் அந்த பள்ளி தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம் என்று நினைக்கின்றனர் அது தவறு , அந்த மாணவர்களில் பெற்றோர்களின் குடும்ப சூழலும் மாணவர்களின் ஒழுக்க நிலையும் முக்கியமானது என்பதை அறிய வேண்டும் , ஆய்வுக்கு வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆசிரியர்கள் மீது மட்டும் தான் என்பது போல் ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி மாணவர்கள் தங்கி படிக்காத விடுதிகளை இரவு பாடச்சாலையாக மாற்ற வேண்டும், மாநில முழுவதும் பெரும்பாலான விடுதிகளில் மாணவ / மாணவிகளே தங்கி படிக்காத நிலையே உள்ளது அப்படி மாணவர்கள் தங்கினாலும் மிக குறைந்த அளவிளேயே தங்கி படிக்கின்றனர், அதுவும் கல்லூரி விடுதிகளில் மட்டுமே இதனையெல்லாம் கணக்கெடுத்து மாணவர்கள் தங்கி படிக்காத விடுதிகளை இரவு பாட சாலையாக மாற்றி விடுதி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவு மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு வகுப்பு நடத்தி தேர்ச்சி விகித்தை அதிக பட்டுத்தலாம் , அதாவது மாலை 6 மணி முதல் 8மணி வரை சிறப்பு வகுப்பு முடிந்து 8 மணியளவில் சிற்றுண்டி வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம்.

பெரும்பாலான விடுதிகளில் காப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதால் ஏற்கனவே உள்ள காப்பாளர்களை பொறுப்பு காப்பாளர்களாக பல கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள விடுதிகளுக்கு பொறுப்பு காப்பாளர்களாக நியமிக்கின்றனர் இதலனால் மாணவர் சேர்க்கை பெருமளவில் நடைபெறுவதில்லை மாணவர்கள் தங்கி படிக்காத நிலைக்கும் இதுவும் ஒரு காரணம், காலியாக உள்ள விடுதிகளில் பொறுப்பு காப்பாளர்களை விடுவித்து அருகில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து விடுதிகளை கண்காணிக்க வேண்டும். அருகில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து கண்காணித்தால் மாணவர்கள் தங்கி படிக்க ஆர்வம் காட்டுவார்கள்.