கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்

2025 2026 ஆண்டுக்கான பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர் இது ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதில் புதிதாக சேர்ந்த மாணவர்களும் பழைய மாணவர்களும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளிக்கு வந்த மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து இனிப்புகள் கொடுத்து சந்தன குங்குமம் வைத்து வரவேற்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் எங்களுக்கு மகிழ்ச்சி என மாணவிகள் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியம்மாள் கூறுகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகள் இப்பொழுது செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் கடந்த கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 99% பத்தாம் வகுப்பில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் எங்கள் பள்ளியில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நீட்டில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் என தெரிவித்தனர். ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவிகளையும் தனி கவனம் செலுத்தி அனைத்து விதமான பயிற்சிகளும் அளித்து வருவதாகவும் தனியார் பல்கலைக் கூட இந்த அளவிற்கு இருக்காது எனவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்து உள்ளது எனவும் தெரிவித்தார்.