
நீண்ட காலமாக வரன் அமையாமல் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருப்போருக்காக, விரைவில் திருமணம் நடக்க மதுரையில் ‘சுயம்வர கலாபார்வதி’ மற்றும் ‘கந்தர்வராஜர்’ யாகங்கள் நடத்தப்பட்டன.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரும், வரன்களும் கலந்து கொண்டனர். சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர், விசேஷ ஹோமங்களோடு சங்கல்பங்கள் செய்தனர். ஆண்களுக்கு பிரத்தியேகமாக ‘சுயம்வர கலா பார்வதி’ யாகமும், பெண்களுக்கு ‘கந்தர்வராஜர்’ யாகமும் ஆச்சார்யார்களால் நடத்தப்பட்டது. கலந்து கொண்டோர்க்கு ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் பெரிய படம், பிரசாதம், அட்சதை வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அனுசத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
