• Thu. Mar 28th, 2024

டெல்லியில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்

Byமதி

Nov 29, 2021

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் அடைந்தது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை.

எனவே இது தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரடியாக காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் பள்ளிகள் கல்லூரிகள் தேதி அறிவிப்பின்றி மூடப்படும் என டெல்லி அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டது. இந்த சில நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மெல்லிய லேசான காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து காற்றின் மாசு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

அதனால், டிசம்பர் முதல் வாரத்தில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவிலிருந்து மோசமான பிரிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெல்லியில் கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *