• Thu. Apr 18th, 2024

புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…

Byகாயத்ரி

May 28, 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல், ஏற்காடு, உதகையை நோக்கி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. உற்சாகமாக நடைபெற்று வரும் கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி ஆகியவையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதுவரை 25,000-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *