ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இதன் அம்சம் என்னவென்றால் நம்மிடமுள்ள ரேஷன் கார்டை வைத்து எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் இன்னும் முழுவதும் அமலுக்கு வரவில்லை.இந்த நிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. . கடைசியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
ஆதார் அமைப்பின் UIDAI வெப்சைட்டில் நீங்கள் ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்கலாம். uidai.gov.in. என்ற வெப்சைட்டில் சென்று ‘Start Now’ என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்களுடைய முகவரி, மாவட்டம் – மாநிலத்தின் பெயரை பதிவிட வேண்டும். அதன் பின்னர் ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் நம்பர், ரேஷன் கார்டு நம்பர், ஈ-மெயில் ஐடி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால் போதும்.
தகுதியில்லாத நிறைய பேர் ரேஷன் கார்டை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அதேபோல், ரேஷன் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தாமல் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.இதனால் தகுதியுடையவர்கள் ரேஷன் பயன்கள் கிடைக்காமல் போகிறது. இதையெல்லாம் சரி செய்ய ஆதார் கார்டை இணைப்பது அவசியம். இதன் மூலம் போலியான ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்படும்.
ஆதார் கார்டு சரிபார்க்கப்பட்டதற்கான தகவல் SMS மூலமாக உங்களுடைய மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது மிகவும் அவசியமாகும்.
ஒருவேளை நீங்களும் உங்களுடைய ரேஷன் கார்டில் ஆதாரை இணைக்காமல் இருந்தால் உடனடியாக இணைப்பது நல்லது. அப்படி இணைக்காவிட்டால் ரேஷன் கார்டின் பயன்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே உடனடியாக இணைக்கும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.
