• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு..!

Byவிஷா

Jan 1, 2024

வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்பண்டிகை வருவதையொட்டி, சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு நேற்று அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வரும் 4-ம் தேதி தலா ரூ. 1,000 வழங்கப்படும். அந்த தொகை ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.