• Sun. May 5th, 2024

ஜனவரி 5ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து..!

Byவிஷா

Jan 1, 2024

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் சேதமடைந்து வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
அதே போன்று வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயிலும், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், மறு மார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
அதே போன்று சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சந்திப்பு இடையே ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த ரயிலுக்கான பயணிகளின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *