• Wed. Feb 12th, 2025

அதிமுகவில் நான் கட்சி பணியாற்றிய பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை எம்.எல்.ஏ அய்யப்பன் பேட்டி

Byகுமார்

Sep 19, 2022

நான் அதிமுகவில் கட்சி பணியாற்றிய பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை என மதுரை உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் கூறுகையில் “விவசாய பணிகளுக்காக வைகை அணையிலிருந்து 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க மனு அளித்தேன், 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும், நான் 8 வயதிலிருந்து எம்.ஜி.ஆர் உடன் அதிமுகவில் பணியாற்றி வருகிறேன், மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் சிறு பிள்ளை அல்ல, நான் இரட்டை இலையுடன் கட்சி பணியாற்றி பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை, சிறுபிள்ளைத்தனமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார், அதிமுக ஒன்றினைய ஒ.பி.எஸ் கட்டளைப் படி நாங்கள் யாரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம், எதிர் வரும் தேர்தல்களில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.