• Wed. Feb 12th, 2025

சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு

ByA.Tamilselvan

Sep 20, 2022

சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. ஆனால், சுப்புலட்சமி தனது பதவியிலிருந்து விலகியதாக நேற்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார். இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் … அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகல் கடிதம் அளித்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றே திமுகவில் இருந்து விலகிவிட்டேன். முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.