• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடைகளில் இனி சிலிண்டர் கிடைக்கும்!

ByA.Tamilselvan

Jul 17, 2022

ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும் ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக விற்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அத்திட்டம் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.
இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையின் பொது வினியோக திட்ட இணை பதிவாளர் தேன்மொழி, சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கூட்டுறவு ரேஷன் கடைகளில், இந்தியன் ஆயில் நிறுவனம் வகுத்துள்ள பாதுகாப்பு நிபந்தனைக்கு உட்பட்டு, உரிய அலுவலரிடம் உரிமம் பெற்று, 5 கிலோ வணிக சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை வைக்கவே இடவசதி இல்லை. ‘அதிக ஆபத்து உள்ள சிலிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவதில் அதிக சிரமம் உள்ளது; எனவே, சிலிண்டர் விற்பனையை துவக்கும் முன், அதற்கான சாதக, பாதகம் குறித்து ஊழியர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.