• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

செல்ஃபி எடுக்கவந்த ரசிகரின் போனை பிடுங்கிய ராணா

Byகாயத்ரி

Sep 16, 2022

இந்தியளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட முக்கிய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌளி சும்மா படத்தை மிரட்டியருப்பார். அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையே மாறிவிட்டது.அப்படியான பெரிய மாற்றத்தை உருவாக்கிய பிரம்மாண்ட வரலாற்று சாதனை படத்தை பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் ராணா டகுபதி. சமீபத்தில் அவர் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக சென்று இருக்கிறார். அப்போது ராணாவின் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்தபோது ராணா அவரின் போனை பிடுங்கி கோபப்படுவது போல விளையாட்டு காட்டியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.