

தென்காசி மாவட்டம் அமைச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் எஸ்.எம்.பி ஸ்போர்ட்ஸ் கிளப் பரமக்குடி அணி மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தது.
06.11.2021 அன்று தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. எஸ்.எம்.பி. ஸ்போட்ஸ் கிளப் பரமக்குடி அணியின் கேப்டன் மேனகா தலைமையில் விளையாடிய அணியின் சிறந்த ஆட்டக்காரர் பரிசை ஐஸ்வர்யா அவர்களுக்கு 2 கிராம் தங்ககாசு பரிசாக வழங்கப்பட்டது. ஐந்து அணிகளுடன் மோதிய எஸ்.எம்.பி அணியினர் இறுதியாட்டத்தில் தனக்கு எதிராக விளையாடிய அணியினர் 16 புள்ளிகளும், எஸ்.எம்.பி அணியினர் 33 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை தட்டி சென்று, முதல் பரிசாக 10001 ரூபாய் ரொக்க பரிசும், சான்றிதழும் பெற்றுக் கொண்டனர்.
எஸ்.எம்.பி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ஆசாத், பயிற்சியாளர் சசி, ஆலோசகர்கள் கார்த்தி மற்றும் தினேஷ் போன்றோர் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் எஸ்.எம்.பி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ஆசாத் கூறும் போது, நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக இந்த போட்டியை வெகுசிறப்பாக நடத்தி வருகிறோம். இதில் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் வெற்றி பெற்று பல பரிசுகளை தட்டி சென்றுள்ளார்கள் என கூறினார்.
