மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5வது தெருவில் சிவகுமார் – மேரிக்குட்டி என்ற தம்பதியினர் திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாத நிலையில் தனியே வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனிடையே இன்று மதியம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் தனது மனைவி மேரி குட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் கணவர் சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனிடையே மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். அவர் மதுரை கோ.புதூர் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று மதியம் உணவகத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் திடிரென முத்துக்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை மாநகர பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்கள் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.