ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் 2012ல் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கொலை சம்பவமாக அது இருந்தது.இதுவரை கொலையாளிக்ள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.அந்த கொலை வழக்கு குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தும் பலனில்லை.
இந்நிலையில் சிபிஐயிடம் விசாரணையை ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
அப்போதும் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை., வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
மேலும், 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதி ஒத்திவைத்தார்.