• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சருக்கு ராமதாஸ் பாராட்டு

ByA.Tamilselvan

Sep 15, 2022

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது குறித்து ட்வீட் செய்துள்ள ராமதாஸ் ” அறிவுத் தீனி தேடி வரும் மாணவச்செல்வங்களின் வயிற்று ப்பசியை போக்குவதற்கான இந்த திட்டம் நல்ல தொடக்கம். மாணவர்களை தக்க வைத்து க்கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம் அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்.அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.